அதிமுக முன்னாள் திருச்சி மண்டல ஐடி விங் செயலாளர் வினுபாலன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், வினுபாலன் அதிமுகவுக்கு வந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.