தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமையும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிராக ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன் முன்னிலையில் OPS அணியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கட்சியில் மீண்டும் சேர்ந்தனர்.