முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், அதிமுகவில் இணைந்துள்ளனர்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில் ஓபிஎஸ் மூலம் நியமிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக நேற்று (பிப்., 13) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.