தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக தரப்பில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த விருப்ப மனுக்களை வாங்க தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டதாக கூறப்படுகிறது. வருகிற 12ஆம் தேதிக்குள் மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் 4ஆவது நாளான இன்றும் தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.