தவெக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வரும் பிப்., 20ஆம் தேதி வரை வழங்கலாம் என தவெக தலைமை அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுவைப் பெறுவதற்கும் அதனைச் சமர்ப்பிப்பதற்குமான கடைசித் தேதி இன்று (பிப்., 14) என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 20ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.