தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டுள்ளது. இதனால், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் இன்று (நவ., 16) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.