5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

15338பார்த்தது
விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இன்று (அக்., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக நேற்று 3 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று தற்போது வரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. நாளை முதல் தீபாவளி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி