புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

5879பார்த்தது
புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மக்கள் வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடா கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை கன மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார். கனமழை குறித்த புகார்களை 1077, 1070, 112 அல்லது 94889 81070 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி