ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்

5பார்த்தது
ஆரஞ்சு அலர்ட்.. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன்.03) மாலை 4 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி