சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன். இமகமுக தலைவரும்,
பாஜக கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான இவர், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேவநாதன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதனை தற்போது கைது செய்து ஆஜர்படுத்த பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.