இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க தனி விமானம் மூலமாக இன்று (நவ.19) பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக பாஜக தலைவர் நயினார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இந்த மாநாட்டை அவர் தொடங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளார். மாநாட்டில் விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.