ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை

41பார்த்தது
ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு இன்று விடுமுறை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு இன்று (ஆக.3) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வரவோ, வாங்கவோ, விற்பனை செய்யவோ சந்தைக்கு வர வேண்டாம் என ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வழக்கம்போல் சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி