சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றால் யாரும் கோயிலுக்குப் போகக் கூடாது என்று அர்த்தமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
ஸ்டாலின் கூறியுள்ளார். கோயிலிலும் சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அதன் பொருள் என்றும், தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்து பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் பேசிய கொள்கையையே தானும் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.