மிசோரம் மாநிலத்தில் 2025-ம் ஆண்டில் பரவிய ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் இதுவரை 9,700-க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மாநிலத்திற்கு ரூ.114.64 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 9,711 பன்றிகள் நோயால் இறந்த நிலையில், பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,620 பன்றிகள் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.