தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக பி.டி.அரசகுமார் பொய் சொல்லி ரூ.100 கோடி வசூலித்தார் என
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்துள்ளார். அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என பொய் சொல்லி அரசகுமார் பணம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அரசகுமார் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிந்து, தற்போது அந்த வழக்கையே போலீஸ் மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.