தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் இன்று (பிப்.9) தமிழகம் வருகிறார். அப்போது தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீரென விலகியது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இன்று நடைபெறும் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் வியூகங்களை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.