மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக கூட்டணி போராட்டம் நடத்தவுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி தஞ்சாவூரிலும், நவம்பர் 24ஆம் திருவாரூரிலும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.