ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெறும் இன்றைய (பிப்.10) போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. இதில், சாகிப்சாதா ஃபர்ஹான் 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடித்து 73 ரன்கள் எடுத்தார்.