பாகிஸ்தானின் கடன் சுமை 28.68 ஆயிரம் கோடி டாலராக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கடன் சுமை ரூ. 25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் அந்நாட்டின் கடன் சுமையானது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 80.6 ட்ரில்லியனாக (286.832 பில்லியன் டாலர், அதாவது 28.68 ஆயிரம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட(2024) 13 மடங்கு அதிகம் என்பதை அதிகாரபூர்வ தரவுகள் வெளிக்காட்டுகின்றன.