பாகிஸ்தான் விமானப்படை 600 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்ட ‘தைமூர்’ வான்வழி எறிகணையின் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த எறிகணை, பாகிஸ்தானின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலம் மற்றும் கடல் இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.