ஆசிய விளையாட்டுப் போட்டியில்
கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது, இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை 15 ரன்களில் வீழ்த்திய
பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், அவரைக் குழந்தையைப் போலக் கேலி செய்து சைகை காட்டியது பெரும் விவாதமாகியுள்ளது. களத்தில் எல்லை மீறி நடந்துகொண்ட சைம் அயூபின் இந்தச் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.