டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்

3747பார்த்தது
டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்
செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தேசிய புலனாய்வு முகமை (NIA) தீவிர விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. செங்கோட்டை, சாந்தினி சவுக் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.