உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஜூலை 20-ம் தேதி நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை, வரும் செப்.12-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த பராமரிப்பு காலத்தில் புதிய பெட்டிகள் பொருத்துதல், புனரமைப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதனால் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, பழனி மலைக்கோயிலுக்கு விரைவாகவும் இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல பக்தர்கள் மீண்டும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.