பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோயில் நிலங்களை முறைகேடாக பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இவருக்கு திண்டுக்கல்லில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்ந
லக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.