அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 1989 முதல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 1991, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளிலும் இத்தொகுதியில் வென்ற அவர், 1996, 2001, 2006 தேர்தல்களில் தோல்வியடைந்தார். 2017-2021 வரை தமிழக முதலமைச்சராகவும், 2021-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர், 2023 முதல் அதிமுக பொதுச்செயலாளராக உள்ளார்.