அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இன்று (நவ.5) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பூத் கிளை கழக நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடப்பதால், அதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அவர் ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.