உங்கள் பான் எண்ணை வரும் டிச.31-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால், ஜன.1-ம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்துவிடும். பான் கார்டு செயலிழந்தால், அரசு நிதி நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவோ, பங்கு சந்தையில் முதலீடு செய்யவோ, எஸ்ஐபி திட்டங்களை தொடங்கவோ முடியாது. மேலும், வீடு வாங்குவது, விற்பது அல்லது வணிகம் செய்வது போன்ற முக்கியமான நிதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே, காலக்கெடுவுக்குள் இணைப்பது கட்டாயம் ஆகும்.