கர்ப்பகாலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ‘ஆட்டிசம்’ ஏற்படும் என பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என 'தி லான்செட்' மருத்துவ இதழ் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்திற்குப் பின் வெளியான இந்த விரிவான ஆய்வறிக்கை, அத்தகைய பாதிப்புகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டுள்ளது. பாராசிட்டமால் மாத்திரை குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று அந்த மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.