தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக முதற்கட்டமாகத் துணை ராணுவத்தினர் இன்று (மார்ச்.7) சென்னை வந்தடைந்தனர். தேர்தல் ஆணையத்தின் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இவர்கள் சென்னை கே.கே. நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த இவர்கள் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.