பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று (மே 15) ஆலோசனை நடத்தி வருகிறார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், கடந்த ஆண்டில் தவெக தலைவராக இருந்த விஜய் நேரில் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், பரந்தூர் விவகாரத்தில் அவர் எடுக்கும் முடிவு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தலாம்.