கடந்த 1960-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் தொடர்புடைய கதைக்களத்துடன் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100 ஆவது திரைப்படமான இதில், யுவன் சங்கர் ராஜா ஒரு சிறப்பு பாடலை பாடியுள்ளார். இப்படம், வரும் 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.