பெற்றோர்களே உஷார்.. 3 வயது சிறுவன் உயிரை பறித்த பலூன்

28பார்த்தது
பெற்றோர்களே உஷார்.. 3 வயது சிறுவன் உயிரை பறித்த பலூன்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே, சாம் என்ற 3 வயது சிறுவன் பலூனை விழுங்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பலூனை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகனின் மரணச் செய்தியைக் கேட்டு தாய் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி