சமீபத்தில் வெளியிட்ட "ஆடி மாச பாவங்கள்" வீடியோவில் இடம்பெற்ற குறிப்பிட்ட காட்சிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்தக் காட்சியை பரிதாபங்கள் சேனல் நீக்கியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த காட்சி யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை என்றும், இருப்பினும் சமூக வலைதளங்களில் சிலரின் மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் வீடியோவில் இருந்து நீக்கியுள்ளதாகவும் பரிதாபங்கள் டீம் தெரிவித்துள்ளது.