ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸில் குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தது, தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், 2026-ல் அமையக்கூடிய ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற்று, செல்வப்பெருந்தகை துணை முதல்வராக பதவியேற்பார் எனக் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.