சென்னை: தேர்தலில் தோற்றால் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி தொகுதியில் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு இந்த எச்சரிக்கையை முதலமைச்சர் விடுத்துள்ளார். கடந்த முறை பாஜக வென்றிருந்த நிலையில், திருநெல்வேலி தொகுதிக்கான 'உடன்பிறப்பே வா' சந்திப்பில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார்.