சென்னை: மது போதையிலிருந்த இளம்பெண்ணை, அவரது தோழியின் நண்பர் சீரழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும், பெரம்பூரை சேர்ந்த இளம்பெண்ணும் தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஆண் நண்பர்களுடன் ஹோட்டலில் மது அருந்தியுள்ளனர். போதையில் உறங்கிய வேலூர் இளம்பெண் எழுந்து பார்த்துள்ளார். அப்போது தனது ஆடைகள் கலைந்து அருகில் ஆண் நண்பர் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்து புகார் அளித்ததில் ஆண் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.