சிவகங்கை அருகே அரசு பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திடீரென திறக்காததால், பேருந்துக்குள் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். பேருந்தின் கதவு திறக்கப்படாததால், உள்ளே இருந்த மாணவர்கள் சிலர் அவசரமாக ஜன்னல் வழியாக இறங்கி வெளியே வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பணிமனை ஊழியர், பேருந்தின் கதவை சரிசெய்து திறந்துவிட்டதைத் தொடர்ந்து உள்ளே இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.