மருதம் மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சந்தனப்பிரியா பசுபதிபாண்டியன், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று (பிப்., 06) நேரில் சந்தித்த சந்தனப்பிரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் சட்டமன்றத்தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.