சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி, தவெக அரசுக்கு எதிராக மீனவர்கள் தீவிர அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.