ஆந்திராவில் வரவிருக்கும் கோதாவரி புஷ்கர விழாவை முன்னிட்டு, நதியை சுத்தமாகவும் மாசு இல்லாமலும் பராமரிக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார். மேலும், நதிநீர் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வழிபாடுகள் மற்றும் சடங்குகளுக்கு மட்கும் தன்மை கொண்ட இயற்கை பொருட்களை மட்டுமே பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.