'செம்மரத்தை வெட்டினால் தோலை உரிப்போம்' என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரித்துள்ளார். திருப்பதியில் உள்ள செம்மரக் கிடங்குகளில் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு நேற்று (நவ., 08) நேரில் சென்று பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண், செம்மரத்தை வெட்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் எச்சரிக்கை பொருந்தும் என எச்சரித்தார்.