அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய், பொய், பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "தைலாபுரத்தில் என்னை பார்த்தபோது அன்புமணி வணக்கம் வைத்தார். நானும் வணக்கம் வைத்தேன். அன்புமணி என்னிடம் ஆசீர்வாதமெல்லாம் வாங்கவில்லை. தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த அன்புமணியிடம் நான் எதுவும் பேசவில்லை" என்று கூறியுள்ளார்.