திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடை முன்பு நடந்த தாக்குதலில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, பெட்ரோல் குண்டுகள் வீசி தப்பினர். இந்த தாக்குதலில் 9 பேர் காயமடைந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.