தொடர் மின்வெட்டைக் கண்டித்து முதல்வர் விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நாட்களாக இப்பிரச்னை நீடிப்பதாகக் கூறி மக்கள் போராடிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.