மக்கள் பணத்தை தொட வேண்டிய அவசியம் எனக்கு கிடையவே கிடையாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப்., 08) பரப்புரையில் பேசிய அவர், இந்த தேர்தலில் உங்கள் (திமுக) பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. ஆட்சி முழுவதும் ஊழல் மலிந்து காணப்படுகிறது. அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். எத்தனை முனை போட்டி வந்தாலும், இங்கு இருமுனைப் போட்டிதான். விசில் அடிக்க ரெடியா.. என கேட்டு முடித்தார்.