கடந்த கால
திமுக ஆட்சியில் இலவச பேருந்து பயணத்தை இழிவுபடுத்தி பேசியவர்களுக்கும் பெண்களை அவமதித்தவர்களுக்கும் மக்கள் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக அமைச்சர் சம்பத்குமார் சாடியுள்ளார். கோவையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை இன்று (அக்.2) தொடங்கி வைத்து பேசிய அவர், முந்தைய ஆட்சியில் நடந்தது போன்ற அவமதிப்புகள் எங்குமே நிகழாத வண்ணம் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.