கடலூர், விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றுக்கு முன்பாக உள்ள மேம்பாலம் சுமார் 20 அடி தூரத்திற்கு உள்வாங்கியுள்ளது. நள்ளிரவில் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தை கண்ட தேசிய நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், அப்பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களை உடனடியாக வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.