சென்னை திரும்பும் மக்கள்.. பல்லாவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

29பார்த்தது
தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் இன்று (அக்.21) சென்னைக்குத் திரும்புவதால், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி