இந்திய தேசத்திற்காக எண்ணற்ற போர்களில் களம் கண்ட லெப்டினன்ட் கர்னல் ஜம்வால் (100), வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டிஷ் இந்திய ராணுவம் மற்றும் இந்திய ராணுவம் இரண்டிலும் பணியாற்றிய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக, 1947-48 இந்தோ-பாக் போரின்போது, கடினமான சோஜிலா கணவாயைக் கடந்து எதிரிகளைத் தாக்கிய இவர், நாட்டைக் காத்த ஒரு உண்மையான நாயகனாகப் போற்றப்படுகிறார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.