தவெகவுக்கு இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழக தலைவர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், எம்எல்ஏ
பதவி என்பது ஒன்றும் 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது' போன்று அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கென்று சமூகக் கடமை இருக்கிறது. ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அதே நபர்கள் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் அவரை ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்களான வாக்காளர்கள் நிராகரித்து பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.